மகன்களுக்கு இசை குறித்த ஞானத்தை ஊட்டி வளர்த்தது போல், தன்னுடைய மகளுக்கும் இளையராஜா சிறு வயதில் இருந்தே இசையையும், பாடல்களையும் கற்பித்தார். பவதாரணியை சிறு வயதிலேயே தான் இசையமைத்த 'மை டியர் குட்டிச்சாத்தான்' என்கிற மலையாள படத்திலும் பாடகியாக அறிமுகம் செய்தார் இளையாராஜா. பின்னர் பவதாரிணி படித்து முடிந்தபின்னர் பல படங்களில் பின்னணி பாடல் பாட துவங்கினார். அதே போல் சிறந்த பாடகிக்கான தேசிய விருது இவருக்கு 'பாரதி' படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு வழங்கப்பட்டது.