“ரஜினி மது குடிக்கும் ஸ்டைல் இதுதானாம்.. ஆனா கமல்..” பயில்வான் ரங்கநாதன் ஷாக் தகவல்..

Published : Jan 24, 2024, 03:13 PM ISTUpdated : Jan 24, 2024, 03:14 PM IST

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் குடிப்பழக்கம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் பேசி உள்ளார்.

PREV
17
 “ரஜினி மது குடிக்கும் ஸ்டைல் இதுதானாம்.. ஆனா கமல்..” பயில்வான் ரங்கநாதன் ஷாக் தகவல்..

நடிகரும் சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி அவ்வப்போது பல சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறார்.

27

ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித் தனுஷ், வடிவேலு கவுண்டமணி போன்ற நடிகர்கள் குறித்தும், த்ரிஷா, நயன்தாரா தொடங்கி கீர்த்தி பாண்டியன், ரேகா நாயர் என பல நடிகைகள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார்.

37

சில பிரபலங்கள் இவரின் பேச்சை கண்டுகொள்ளவில்லை என்றாலும் சிலர் நேரடியாகவே அவரிடம் சண்டைக்கு செல்கின்றனர். அந்த வகையில் நடிகை ரேகா நாயர் ஒருமுறை நேரடியாகவே பயில்வான் ரங்கநாதனிடம் சண்டைக்கு சென்றுவிட்டார்.

47

மேலும் பயில்வான் இறந்துவிட்டால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் என்றும் ஓப்பனாகவே ரேகா கூறியிருந்தார். ஆனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசுவதை பயில்வான் நிறுத்தவே இல்லை.

57
Bayilvan Ranganathan

இந்த நிலையில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் குடிப்பழக்கம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பயில்வான் பேசி உள்ளார். அவரின் பேட்டியில் “ ரஜினி தனது திருமணத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பார்ட்டி வைத்திருந்தார். நானும் அந்த பார்ட்டிக்கு சென்றிருந்தேன். அங்கு பல வகையான மது இருந்தது. ஆனால் சைட் டிஷ் இல்லை. ஆனால் சைட் டிஷ் வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் யாரும் ரஜினியிடம் கேட்கவில்லை. எல்லோருக்கும் பயம்.

67
Super Star Rajini

ஆனால் முதல் ரவுண்டு முடிந்த உடன் ரஜினியிடம் சைட் டிஷ் எதுவும் இல்லையே என்று கேட்டேன். அப்போது அவர், இதுதான் ரஜினி ஸ்டைல். இப்படி குடிப்பது உடலுக்கு நல்லது என்றார். நான் உடனே சைட் டிஸ் இல்லை என்றால் வயிறு எரியும் என்று, செட் ஆகாது என்றேன். அதன் பின்னர் அவர் பல விதமான சைட் டிஷ்களை வரவழைத்தார்.

77
Kamalhaasan

ஆனால் கமல்ஹாசன் அப்படி இல்லை.. உலகில் உள்ள அனைத்து அசைவ உணவுகளையும் சாப்பிடுவார். அவர் தயாரிக்கும் படங்களின் ஷூட்டிங்கில் அனைவருக்கும் விதவிதமான உணவுகள், ஸ்னாக்ஸ் கிடைக்கும். அவர் நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே மது அருந்துவார். ஆனால் எவ்வளவு மது குடித்தாலும் அதிகாலை 4 மணிக்கு எழுந்துவிடுவார். இது கமல்ஹாசனின் பழக்கம்” என்று தெரிவித்தார்.

click me!

Recommended Stories