விஜயகாந்தின் தர்மச்சக்கரம், படையப்பா போன்ற படங்களில் கூட்டத்தோடு கூடமாக வந்து சென்றவர்... ரோபோ ஷங்கர். இவரின் காமெடி திறமையை வெளிப்படுத்தும், பாலமாக அமைந்த நிகழ்ச்சி தான் 'அசத்த போவது யாரு'. இந்த நிகழ்ச்சி மூலம் குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவர்ந்த ரோபோ ஷங்கர், விஜய் டிவிக்கு தாவி, 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய மெமிக்கிரி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து பலரை சிரிக்க வைத்ததால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.