Actress Athulyaa Ravi : தொடர்ச்சியாக தமிழில் பல படங்களில் நடித்து வந்த அதுல்யா ரவி, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தெலுங்கு திரைப்பட உலகிலும் களமிறங்கினார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "காதல் கண் கட்டுதே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்தான் அதுல்யா ரவி. கோவையில் பிறந்து அங்கேயே தனது பட்டப்படிப்பை முடித்தவர் இவர்.
"ஏமாளி", "நாகேஷ் திரையரங்கம்", "நாடோடிகள் 2" மற்றும் "அடுத்த சாட்டை" உள்ளிட்ட நல்ல பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைபெற்றுவருகின்றார். முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படம் மூலம் கிளாமர் நாயகியாகவும் மாறினார்.
33
Actress Athulyaa Ravi
இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "கடாவர்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்த நிலையில், தற்போது டீசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.