Pushpa 2 Box Office Records : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது புஷ்பா 2 தி ரூல். இப்படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இதன் முதல் பாகமே மாஸ் ஹிட் ஆனதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இந்தியில் புஷ்பா முதல் பாகமே 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்ததால் அதன் இரண்டாம் பாகம் பல ரெக்கார்டுகளை தகர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
24
Pushpa 2 Allu Arjun
புஷ்பா 2 வசூல் சாதனை
எதிர்பார்த்தபடியே பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை புஷ்பா 2 திரைப்படம் பதம் பார்த்துள்ளது. உலகளவில் நான்கே நாட்களில் 829 கோடி வசூலித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் இந்தியில் மட்டும் அதிவேகமாக 300 கோடி வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஷாருக்கானின் ஜவான், ரன்பீர் கபூரின் அனிமல், சன்னி தியோல் நடித்த கடார் 2 போன்ற படங்களின் சாதனையை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்துள்ளது.
* அதுமட்டுமின்றி இந்தியில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படமும் புஷ்பா 2 தான். இதற்கு முன்னர் ஷாருக்கானின் ஜவான் படம் முதல் நாளில் 64 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது 72 கோடி வசூலித்து புஷ்பா 2 அதை முறியடித்து உள்ளது.
* விடுமுறை இல்லாத நாட்களில் ரிலீஸ் ஆகி அதிக வசூல் செய்த இந்தி படமும் இதுதான்.
* அதேபோல் பண்டிகை இல்லாத நாட்களில் ரிலீஸ் ஆகி இந்தியில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் புஷ்பா 2 படைத்துள்ளது.
44
Pushpa 2 Box Office Records
பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன அல்லு அர்ஜுன்
* புஷ்பா 2 திரைப்படத்தின் இந்தி வெர்ஷன், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ஒரே நாளில் ரூ.86 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தி படமும் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை.
* இந்தியில் அதிவேகமாக 250 கோடி வசூலித்த படமும் இதுதான்.
* இப்படம் இந்தியில் மட்டும் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ.291 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன்.