சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா; அதன் மதிப்பு இத்தனை கோடியா?

Published : Dec 10, 2024, 08:33 AM ISTUpdated : Dec 10, 2024, 08:39 AM IST

Serial Actress Alya Manasa : சீரியல் நடிகை ஆல்யா மானசா அண்மையில் பிரம்மாண்ட வீடு கட்டிய நிலையில், தற்போது சொகுசு கப்பல் ஒன்றை சொந்தமாக வாங்கி உள்ளார்.

PREV
16
சொந்தமாக சொகுசு கப்பல் வாங்கிய ஆல்யா மானசா; அதன் மதிப்பு இத்தனை கோடியா?
Alya manasa, Sanjeev

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதன்முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த சீரியலில் நடித்தபோது தான் ஆல்யா மானசாவுக்கும் சஞ்சீவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சீரியல் ஜோடியாக இருந்த இவர்கள் பின்னர் ரியல் ஜோடியாகினர். இந்த ஜோடிக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

26
Serial Actress Alya Manasa

திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவினார். சன் டிவியில் ஒளிபரப்பான இனியா என்கிற சீரியலில் நாயகியாக நடித்தார் ஆல்யா. அதேபோல் சஞ்சீவ்வும் சன் டிவியில் கயல் என்கிற சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட்டானார். அந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

36
Alya Manasa Salary

சின்னத்திரையை பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆல்யா மானசாவும் ஒருவர். இவர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம். சின்னத்திரை மூலம் நன்கு சம்பாதித்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் தங்கள் சொந்த வீட்டை கட்டி அதில் குடியேறினர்.

இதையும் படியுங்கள்... புதுசா கட்டின வீடு மட்டும் 1.8 கோடி.. இப்போ நான் வாங்குற சம்பளம்.. மனம் திறந்த ஆல்யா மானசா - வெயிட்டு கை தான்!

46
Alya Manasa Business

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகளவில் சம்பளம் வாங்குவதால் அதை அவர்கள் ஏதாவது பிசினஸில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நடிகை ஆல்யா மானசாவும் தற்போது புது பிசினஸ் ஒன்றை தொடங்கி அதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

56
Alya Manasa Husband Sanjeev

அதன்படி கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸ் மிகவும் பிரபலம். அங்குள்ள போட் ஹவுஸில் விடுமுறையை கழிக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த பலரும் ஆலப்புழா நோக்கி படையெடுத்து வருகின்றனர். போட் ஹவுஸில் தங்க ஒரு நாளைக்கே ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது.

66
Alya Manasa Boat House

அந்த வகையில் ஆல்யா மானசாவும் தற்போது சொந்தமாக போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை ரூ.2 கோடியாம். அதில் நவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறைகள், பிரம்மாண்ட டைனிங் ஹால், டிஜே என சகல வசதிகளும் இருக்கிறது. புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள ஆல்யா மானசாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... காதலில் விழுந்து கணவன், மனைவியாக மாறிய தமிழ் சீரியல் ஜோடிகள் இத்தனை பேரா?

click me!

Recommended Stories