Pushpa 2 Movie
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும், அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரூ.350 கோடி வசூல் சாதனை படத்தை நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் 12,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
Pushpa 2 Collection Update
'புஷ்பா தி ரூல்' திரைப்படம் வெளியாகி ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனத்தையும் பெற்றது. ஆனால் விமர்சனங்களை தாண்டி சில படங்கள் கண்டிப்பாக ரசிகர்களை சென்றடையும் என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறிய இப்படம், நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்து தற்போது அசுர வேகத்தில் திரையரங்கில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
Pushpa 2 Beat 2.0 Movie Life Time Collection
முதல் நாளே, ரூ.294 கோடி வசூலித்த 'புஷ்பா 2' திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் பல படங்களின் சாதனையை முறியடித்து வருகிறது. அந்த வகையில், நான்காவது நாளில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி நான்கு நாட்களில், சுமார் ரூ.829 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. இதன் மூலம், 800 கோடி வசூல் சாதனை படைத்த ரஜினிகாந்தின் 2.0 படத்தின் சாதனையை காலி செய்துள்ளது 'புஷ்பா 2'. மேலும் இதே வேகத்தில் சென்றால், கல்கி, RRR, பாகுபலி போன்ற படங்களின் லைப் டைம் வசூலை ஒரே வாரத்தில் பீட் பண்ணிவிட்டுடும் இந்த படம் என கூறி வருகின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.
'அண்ணா' சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அள்ளிக்கொடுக்கும் ஜீ தமிழ்!