Theatre Release Movies on December 13
அல்லு அர்ஜுன் நடித்துள்ள பான் இந்தியா படமான புஷ்பா 2 கடந்த வாரம் ரிலீஸ் ஆனதால் அதற்கு போட்டியாக பெரியளவில் தமிழ் படங்கள் வெளியிடப்பவில்லை. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் புஷ்பா 2 திரைப்படம் திரையிடப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் 30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்கு இந்த வாரம் என்னென்ன தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.
Soodhu Kavvum 2
சூது கவ்வும் 2
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட் அடித்த படம் சூது கவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி இருந்தார். சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்துள்ளனர். இப்படத்தை அர்ஜுன் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக சிவா நடித்திருக்கிறார். இப்படத்தையும் சிவி குமார் தான் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 13-ந் தேதி திரைக்கு வருகிறது.
Miss You
மிஸ் யூ
சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் தான் மிஸ் யூ. இப்படத்தை ராஜசேகர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆக இருந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தற்போது டிசம்பர் 13-ந் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... புஷ்பா 3-ம் இல்ல; அட்லீ படமும் இல்ல! அல்லு அர்ஜுனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
Once Upon a time in madras
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்
பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இப்படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகைகள் அபிராமி, பவித்ரா, அஞ்சலி நாயர், நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற டிசம்பர் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
Mazhaiyil Nanaigiren
மழையில் நனைகிறேன்
சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால் நாயகனாக நடித்துள்ள படம் மழையில் நனைகிறேன். இப்படத்தில் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 12-ந் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... விலகிய AR ரகுமான்; ‘சூர்யா 45’ இசையமைப்பாளராக கமிட்டான டிரெண்டிங் பாய்