'அண்ணா' சீரியல் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? அள்ளிக்கொடுக்கும் ஜீ தமிழ்!

First Published | Dec 9, 2024, 2:11 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நடித்துவரும் பிரபலங்கள், ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
 

Anna serial Actor Senthil Kumar

உணர்வுபூர்வமான அண்ணன் - தங்கைகள் இடையே உள்ள பாசத்தை மையமாக வைத்து, கிராமத்து கதைகளத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அண்ணா.  இந்த சீரியலில் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, போன்ற சீரியல்களிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சன் டிவியில் 'நந்தினி' தொடரில் நடித்து பிரபலமான நித்யா ராம் நடித்து வருகிறார்.
 

Saravanan Meenatchi Actor Senthil

நான்கு தங்கைகளுக்கு அண்ணனாகப் பிறந்து, அவர்களை வளர்க்க ஒரு அம்மாவாக மாறும் கதாநாயகன் பற்றிய கதைதான் இந்த சீரியல். சிறுவயதிலேயே அம்மா செய்யாத கொலைக்காக பழியை ஏற்றுக்கொண்டு ஜெயிலுக்கு செல்லும் நிலையில், தன்னுடைய நான்கு தங்கைகளையும் வளர்த்து ஆளாக்கும் ஷண்முகம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை தேடித் தரவும் கஷ்டப்படுகிறார்.

நயன், திரிஷாலாம் வேணாம்; லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியான அக்கட தேசத்து நாயகி!
 

Tap to resize

Anna Serial Heroine Nityaram

எதிர்பாராத சமயத்தில் மருத்துவராக இருக்கும் கதாநாயகி பரணி (நித்யா ராமை) திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. பரணிக்கு இஷ்டம் இல்லாமல் நடந்த திருமணம் இது என்றாலும், பின்னர் சண்முகத்துடன் வாழ தயாராகிறார். பரணி - ஷண்முகம் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிரியே பரணினியின் தந்தையான சௌந்தர பாண்டி தான். இவர் தான் சண்முகத்தின் அம்மா ஜெயிலுக்கு செல்ல காரணம். 
 

Zee Tamil Serial Anna

உணர்வுபூர்வமான கதைக்களத்தில்ஒளிபரப்பாகி வரும்  இந்த சீரியல் சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி,சண்முகமாக நடித்து வரும் செந்தில் ஒரு நாளைக்கு ரூ.28,000 முதல் 30,000 வரை சம்பளமாக பெறுகிறார்.  இவருக்கு ஜோடியாக நடித்து வரும் நித்யா ராம் ரூ.20,000 முதல் 25,000 வரை பெறுகிறார் என கூறப்படுகிறது. 

ஒரே ஹீரோவுக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்தவர்; யார் இந்த பப்ளி பேபி தெரிகிறதா?

Anna Serial Cast Salary

சௌந்தரபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சீனியர் நடிகரான பூவிலங்கு மோகனுக்கு 15,000 முதல் 18,000 வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இசக்கி அம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும், ப்ரீத்தா சுரேஷ் ரூ.10,000 சம்பளமாக பெறுகிறார். முத்துப்பாண்டி கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் அப்சல் ஹமீதுக்கு 15,000 சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Senthil kumar and Nityaram Salary

பாக்கியம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ரீலதா 8000 முதல் 10,000 வரை சம்பளமாக பெறுகிறார். வைகுண்டம் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ் டி பி ரோசரி 12,000 சம்பளமாக பெற்று வருகிறாராம். ரத்னாவாக நடிக்கும் சுனிதாவுக்கு 10,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. வீராவாக நடித்து வரும் கௌரி கோப்பன் 8000 சம்பளமாக பெறுகிறார். செல்லக்கனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா சின்ராஜ் 6,000 சம்பளமாக பெறுகிறார்.

41 வயதில் விஜய்யுடன் ஐட்டம் டான்ஸ் ஆடி அதிரவிட்ட திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Tamil serial Actress

கடந்த ஆண்டு துவங்கப்பட்ட 'அண்ணா' சீரியல் 500 எபிசோடுகளை எட்ட உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டாப் 3 TRP பட்டியலில் இடம்பிடித்து வரும் இந்த தொடரை துர்கா சரவணன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!