Allu Arjun
பான் இந்தியா ஹீரோ அல்லு அர்ஜுன்
புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்துள்ளவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. சுகுமார் இயக்கிய இப்படத்தில் செம்மரக் கடத்தல்காரனாக நடித்துள்ளார் அல்லு அர்ஜுன். இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக பகத் பாசிலும் நடித்துள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது.
Pushpa 2 The Rule
புஷ்பா 2 ஹிட்
புஷ்பா 2 திரைப்படமும் பக்கா கமர்ஷியல் படமாக இருந்ததால் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரிலீஸ் ஆன முதல் நான்கு நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது புஷ்பா 2. இன்னும் சில தினங்களில் இப்படம் ஆயிரம் கோடி வசூலை எட்டிவிடும் என்பதால், அல்லு அர்ஜுனின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக புஷ்பா 2 மாற உள்ளது. இப்படத்திற்கு பான் இந்தியா அளவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைக்கும் புஷ்பா 2! 4 நாள் வசூல் நிலவரம் இதோ
Pushpa 3 The Rampage
புஷ்பா 3
புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸில் புஷ்பா 3-ம் பாகத்திற்கான லீடு கொடுத்து முடித்திருப்பதால், அடுத்ததாக அல்லு அர்ஜுன் புஷ்பா 3 படத்தில் நடிக்கலாம் என பலரும் நினைத்திருக்கலாம். ஆனால் புஷ்பா 3 திரைப்படம் தற்போதைக்கு எடுக்க வாய்ப்பில்லையாம். அப்படத்தை சுமார் 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னரே எடுக்கும் ஐடியாவில் உள்ளார்களாம். அதனால் அல்லு அர்ஜுனின் அடுத்த படமாக புஷ்பா 3 நிச்சயம் இருக்காது.
Allu Arjun, Atlee
அட்லீ - அல்லு அர்ஜுன் காம்போ
அதேபோல் ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதற்குள் சல்மான் கான் படத்தை இயக்க அட்லீ சென்றுவிட்டதால் அந்தப் படமும் தற்போது டேக் ஆஃப் ஆக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. இதுதவிர அனிமல் படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் பெயரும் இந்த பட்டியலில் அடிபட்டது. ஆனால் அதுவும் உண்மையில்லையாம்.
Allu Arjun Next Movie With Vipin Das
அல்லு அர்ஜுன் அடுத்த படம்
அல்லு அர்ஜுன் அடுத்ததாக யாரும் எதிர்பாராத ஒரு இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். அவர் வேறுயாருமில்லை மலையாளத்தில் ஜெய ஜெய ஹே என்கிற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை இயக்கிய விபின் தாஸ் உடன் தான் அல்லு அர்ஜுன் அடுத்ததாக கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மலையாளம் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ளதாகவும், இது தான் அல்லு அர்ஜுனின் அடுத்த படமாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... ரசிகையின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் கொடுத்த 'புஷ்பா 2' அல்லு அர்ஜுன்!