விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் 100 நாட்களை டார்கெட் செய்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஒரு சிலர் தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை டிவியிலோ அல்லது ஹாட் ஸ்டார் ஓடிடியிலோ பார்த்து வந்தாலும், இன்னும் சிலர் ஓடிடியில் லைவ்-வாக ஒளிபரப்பாகும் வீடியோக்களை வெறித்தனமாக பார்த்து வருகின்றனர்.
25
Bigg boss contestant List
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், முதல் நாளே 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றனர். முதல் போட்டியாளராக பிரபல தயாரிப்பாளரும், பிக்பாஸ் ரிவியூவருமான ரவீந்தர் சந்திரசேகரன் உள்ளே சென்ற நிலையில், அவர் தான் முதல் போட்டியாளராகவும் வெளியேறினார். இவரை மக்கள் குறைந்த வாக்குகளுடன் வெளியேற்ற காரணம் இவருடைய உடல் நிலை இந்த நிகழ்ச்சிக்கு ஒற்றுவாராமல் போனது தான் என கூறப்பட்டது.
இவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில், தர்ஷா குப்தா, அர்னவ், உள்ளிட்ட மொத்தம் 9 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் கேங்காக விளையாடிய சில போட்டியாளர்களை விஜய் சேதுபதி வெளுத்து வாங்கியது மட்டும் இன்றி, கதவை திறக்க சொல்கிறேன் விளையாட இஷ்டம் இல்லாதவர்கள் வெளியே வாங்க என சொன்னது யாரும் எதிர்பாராத தருமனாகவே இருந்தது. பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், அடுத்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என்றே நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
45
Sivakarthikeyan Amaran Movie
ஒருபுறம் பிக்பாஸ் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக்பாஸ் சிவகார்த்திகேயனுக்காக தன்னுடைய ரூல்ஸை மாற்றி புது சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை வெளியுலக தொடர்பே இருக்க கூடாது என்பதே விதி. எனவே வெளியில் நடக்கும் விஷயங்கள் போட்டியாளர்களுக்கு எந்த விதத்திலும் தெரியப்படுத்த கூடாது என்பது உறுதியாக இருப்பார்.
பிரீஸ் டாஸ்கின் போது, பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் பெற்றோர் உள்ளே சென்றால் அவர்களுக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்படும். ஆனால் இந்த ரூல்ஸை மீறும் விதத்தில், பிக்பாஸ் நடிகைகள் சிவாகார்த்திகேயன் நடித்து வெளியான 'அமரன்' படத்தை போட்டியாளர்களுக்கு காட்டியுள்ளார். இது பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், நெட்டிசன்கள் பலர் இதனை விமர்சனம் செய்து ட்ரோல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.