வெற்றிமாறன் - கவுதம் மேனன் காம்போவில் ஒரு சிம்பு படம்! இதென்ன புது ட்விஸ்டா இருக்கு

First Published | Dec 10, 2024, 9:25 AM IST

Simbu Next Movie : கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்த சிம்பு, தற்போது மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

Simbu

தக் லைஃப் சிம்பு

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் சிம்பு. அவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் தயாராகி உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

Simbu Movie Line Up

சிம்பு கைவசம் உள்ள படங்கள்

அடுத்ததாக நடிகர் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் அப்படத்தை தயாரிக்கும் பொறுப்பில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகியது. இதனால் விரைவில் புது தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்து அப்படத்தை எடுக்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்... STR 48 படத்தை கைவிட்ட கமல்; ஆண்டவர் இல்லேனா என்ன? அதகளப்படுத்த சிம்பு போடும் மாஸ்டர் பிளான்

Tap to resize

Simbu Next Movie

பிசியான சிம்பு

இதுதவிர ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் சிம்பு. அப்படத்திற்காக விண்டேஜ் லுக் மற்றும் ஸ்டைலுக்கு மாறியுள்ள சிம்பு, அண்மையில் அதன் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார். தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து, அப்படத்தை முடித்த பின்னர் சிம்பு படத்தின் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

Simbu Next With Gautham Menon

சிம்புவின் புதிய படம்

இந்நிலையில், நடிகர் சிம்புவின் மற்றொரு படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அதில் ட்விஸ்ட் என்னவென்றால், வெற்றிமாறனிடம் உள்ள கதையை வாங்கி சிம்புவுக்காக பட்டி டிங்கரிங் பார்த்து இயக்க உள்ளாராம். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... அமரன் படத்தை பாராட்டிய சிம்பு; கோபத்தில் கொந்தளித்த நயனின் கணவர் விக்கி - என்ன ஆச்சு?

Latest Videos

click me!