எதிர்பாராத திருப்பங்கள் முதல் புகைப்பட சர்ச்சை வரை! லீக் ஆனது புஷ்பா 2 படத்தின் கதை!

First Published | Nov 29, 2024, 3:46 PM IST

சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2' படத்தின் ட்ரைலர் இந்த படம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கப்போகிறது, என்பதைக் காட்டியது. 'புஷ்பா 2' ரிலீசுக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புஷ்பா 2 கதை பற்றிய தகவல் கசிந்துள்ளது.
 

Pushpa 2 Movie

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க.. இப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்களும் இந்த படம் குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசி வருவதை பார்க்க முடிகிறது. 

அல்லு அர்ஜுன் நடிப்பில், பான் இந்தியா திரையாடமாக, டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் 'புஷ்பா தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
 

Pushpa 2 Story Leaked

ஏற்கனவே தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், இதற்க்கு முன் பான் இந்தியா படமாக வெளியான KGF, காந்தாரா, பாகுபலி, போன்ற பிற மொழி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால்... புஷ்பா 2 படத்தையும்   வரவேற்க தமிழ் ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் வெளியான போது, தமிழகத்திலும் நல்ல வசூல் வரவேற்பை பெற்றது.

கல்யாணம் எப்போ? திருப்பதி கோவிலில் வைத்து அறிவித்த கீர்த்தி சுரேஷ்!
 

Tap to resize

Allu arjun movie

அதே போல் சமீப காலமாக தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த, இந்தியன் 2, கங்குவா, வேட்டையன் போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், மொழி கடந்து சிறந்த படங்களை கோலிவுட் ரசிகர்கள் வரவேற்க தயங்குவது இல்லை. உதாரணத்துக்கு பிக்பட்ஜெட் படங்களை விடுங்கள், லோ பட்ஜெட் படமான மஞ்சுமல் பாய்ஸ் படம் தமிழகத்தில் அதிகம் கொண்டாடப்பட்டது, இதற்க்கு மிகப்பெரிய உதாரணம்.
 

Rashmika And Allu Arjun

இந்த படங்களை போல் புஷ்பா படமும் கொண்டாட பட வாய்ப்புகள் அதிகம் என்பதே திரைப்பட விமர்சகர்களின் கருத்து.  இந்த படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புஷ்பா 2 கதை பற்றிய சில தகவல்கள் வலம் வந்துகொண்டிருக்கிறது.

அதாவது இயக்குனர் சுகுமார், முதல் பாகத்தை முடிந்த கதையில் இருந்து தான், புஷ்பா 2 துவங்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில், போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத், மற்றும் புஷ்பா இடையே ஏற்படும் ஈகோ மோதல், கடுமையான பகையாக மாறுகிறது. இதுவே புஷ்பா 2 படத்தின் கதை என கூறப்படுகிறது.

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவங்கியது! வெளியானது ஹல்தி போட்டோஸ்!

Pushpa Mind Blowing Story

புஷ்பராஜ் இடையேயான சண்டை மட்டுமே என்று நினைப்பது தவறு. ஷெகாவத் போலவே மற்றொரு நபருடனும், புஷ்பாவுக்கு ஈகோ மோதல் தொடங்குகிறது. செம்மரக் கடத்தல் கூட்டத்திற்கு புஷ்பராஜ் சாம்ராட்டாகிறார். மிகப்பெரிய உயரத்திற்கு வளர்கிறார். இறுதியில், முதல்வருடனும் புஷ்பராஜ்க்கு தொடர்பு ஏற்படுகிறது.

ஒரு விருந்தில், புஷ்ப ராஜுடன் புகைப்படம் எடுக்க முதல்வராக இருக்கும் ஜெகபதி பாபு மறுக்கிறார். நான் முதல்வர்.. அவன் கடத்தல்காரன்.. ஒரு கடத்தல்காரனுடன் முதல்வர் புகைப்படம் எடுப்பதா? என்று கூறுகிறார். இதனால் புஷ்பாவின் ஈகோ கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. ஜெகபதி பாபுவை முதல்வர் பதவியிலிருந்து இறக்கும் வரை புஷ்பா தூங்க மாட்டான். ஜெகபதி பாபு, புஷ்பா இடையே ஈகோ உயர்கிறது. ஒரு புகைப்படம் எடுத்திருந்தால் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்திருக்காது என்ற வசனமும் இருக்கிறதாம்.

Sukumar and Allu arjun Pushpa

போலீஸாக இருந்தாலும் சரி, முதல்வராக இருந்தாலும் சரி, தனது ஈகோவைப் பாதித்தால் புஷ்பராஜ் சகித்துக் கொள்ள மாட்டான் என்ற அர்த்தத்தில் சுகுமார் இரண்டாம் பாகக் கதையை எழுதியுள்ளார். கதை கசிவு குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் தற்போது நடந்து வருகிறது. படம் ரிலீஸ் ஆன பின்னரே முழு விவரங்கள் தெரியவரும்.

டீன் ஏஜ்ஜை கடந்தாச்சு! 20-ஆவது பிறந்தநாளை செம்ம Vibe உடன் கொண்டாடிய அனிகா சுரேந்திரன்!

Latest Videos

click me!