தனுஷுடன் கிசுகிசு; திருமணமாகும் முன்பே கர்ப்பமானவர்! யார் இந்த நடிகை தெரிகிறதா?

First Published | Nov 29, 2024, 3:01 PM IST

விவாகரத்து பெற்ற நடிகை ஒருவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானார், அவரின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul Childhood Photo

அக்கட தேசமான கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகை ஒருவர், இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் விவாகரத்து பெற்று பிரிந்த அந்த நடிகை தனுஷ் உடனும் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் 6 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் காதல் வயப்பட்ட அவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமானார். கர்ப்பிணியாகவே திருமணம் செய்துகொண்ட அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Amala Paul

அந்த நடிகை வேறுயாருமில்லை... அமலா பால் தான். தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த படம் என்றால் அது மைனா தான். அப்படத்தில் நடித்த பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இதனால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Tap to resize

AL Vijay, Amala Paul

விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தபோது இயக்குனர் ஏ.எல்.விஜய் மூலம் காதல் வயப்பட்டார் அமலா பால். இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்த அமலா பால், இயக்குனர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை கடந்த 2017-ம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதையும் படியுங்கள்... தனுஷின் விவாகரத்தை விமர்சித்த நயன்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Amala Paul Pregnant

ஏ.எல்.விஜய்யை பிரிந்த பின்னர் ஆடை என்கிற படத்தில் ஆடையின்றி நடித்து அதிர்ச்சி கொடுத்தார் அமலா பால். அதன்பின்னர் இவருக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததாலும் இந்தியில் போலா, மலையாளத்தில் ஆடுஜீவிதம் மற்றும் லெவல் கிராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார்.

Amala Paul second Marriage

இதனிடையே நடிகை அமலா பாலுக்கு கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான 8 மாதங்களிலேயே குழந்தை பெற்றெடுத்தார் அமலா பால். இதன்மூலம் திருமணத்துக்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 

Amala Paul Rare Childhood Photo

நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அமலா பால் தற்போது மகனை சேவித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை அமலா பால் குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கல்யாணம் எப்போ? திருப்பதி கோவிலில் வைத்து அறிவித்த கீர்த்தி சுரேஷ்!

Latest Videos

click me!