அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்ஷா பந்தன், கட்புட்லி மற்றும் ராம் சேது ஆகிய 5 திரைபடங்கள் வெளியாகின. இவற்றில் கட்புட்லி மட்டும் நேரடியாக OTTயில் வெளியானது. மீதமுள்ள நான்கு படங்களும் திரையரங்குகளில் ரிலீசாகி படுதோல்வியை சந்தித்தன. இதில் ஒரு படம் கூட அப்படத்தின் பட்ஜெட் தொகையை கூட வசூலிக்கவில்லை.
அமிதாப் பச்சன்
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தான் இந்த பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். அவர் நடிப்பில் இந்த ஆண்டு ஜூண்ட், ரன்வே 34, பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை ஆகிய நான்கு திரைப்படங்கள் ரிலீசாகின. இதில் பிரம்மாஸ்திராவை தவிர மற்ற மூன்று படங்களும் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தன.
அஜய் தேவ்கன்
அஜய் தேவ்கனுக்கு இந்த ஆண்டு கலவையான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனெனில் இந்த வருடம் அவர் கேமியோ ரோலில் நடித்த கங்குபாய் கத்தியவாடி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் வெற்றி அடைந்தன. ஆனால் அவர் நாயகனாக நடித்த ரன்வே 34 மற்றும் தேங்க் காட் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
அமீர்கான்
அமீர்கான் நடிப்பில் கடந்த 4 வருடங்களாக எந்த ஒரு படமும் ரிலீசாக வில்லை. 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அவர் நடிப்பில் வெளியான படம் தான் லால் சிங் சத்தா. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பாய்காட் டிரெண்ட் காரணமாக, படுதோல்வியடைந்தது. இதனால் இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.
ஹிருத்திக் ரோஷன்
தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா திரைப்படம், இந்தியிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. சைஃப் அலி கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்த இப்படம் தமிழ் படம் ரேஞ்சுக்கு இல்லை என்பதால், இப்படத்தின் வசூலும் சிறப்பாக இல்லை.
டைகர் ஷெராஃப்
டைகர் ஷெராஃப்பின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த படம் தான் ஹீரோபண்டி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீசானது. முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் 2-ம் பாகமும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் படு தோல்வியை சந்தித்தது.