இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், உருவான காமெடி திரைப்படம் 'பிரின்ஸ்'. காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தனக்கு இருக்கும், அரியவகை நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு Highly Sensitive Person என்ற நோய் பாதிப்பு உள்ளதாம்.
சமீபத்தில் தான் நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள மையோசிட்டி பிரச்சனை குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து அனுதீப் தனக்குள்ள பிரச்சனை குறித்து பேசி ஷாக் கொடுத்துள்ளார்.