சமீப காலமாக பல்வேறு நாட்டை சேர்ந்த நடிகைகள் தமிழ் மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே, எமி ஜாக்சன் மிகவும் பிரபலமான நிலையில் தற்போது... அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் எல்லி அவ்ராம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு மிக்கி வைரஸ் என்னும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் நாம் ஷபானா, பஸார் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் இவர், ஏற்கனவே தமிழில் நடிகை காஜல் அகர்வால் நடித்த, 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் நடித்த நிலையில் இந்த படம் தற்போது வரை ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.
இதை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக... 'நானே வருவேன்' படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து இவரை தமிழில் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவர்ச்சிக்கு குறை வைக்காமல்... பாத் டவலுடன், வளையவளைய போஸ் கொடுத்து இளம் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது, வைரலாகி வருகிறது.
தீபாவளிக்கு தொலைக்காட்சியில் வெளியாகி டி.ஆர்.பி-யில் மாஸ் காட்டிய பீஸ்ட்! டாப் 3 பட்டியல் இதோ...