தூக்கு துரை மகளா இது? தண்ணீருக்கு நடுவே வெள்ளை உடையில்... ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து மிரட்டும் அனிகா!

First Published | Aug 21, 2022, 3:19 PM IST

விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வரும் அனிகா,  தற்போது வெள்ளை நிற உடையில் தண்ணீருக்கு நடுவே எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

மலையாள குழந்தை நட்சத்திரமான அனிகா, தற்போது 17 வயதை நெருங்கி விட்டதால், குழந்தை நட்சத்திரம் என்கிற அடையாளத்தை மாற்ற, ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வியப்படைய செய்து வருகிறார்.

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் நடித்த தூக்கு துரையின் மகளா..? இப்படி என்று வாய் பிளந்து அனிகாவின் அழகை கண்கொட்டாமல் ரசித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!
 


அஜித் - நயன்தாராவின் ரீல் மகளான அனிகாவிற்கு எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. இதன் காரணமாகவே தற்போது சிலர் இவரை ஹீரோயினாக வைத்து படம் எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

ஏற்கனவே அனிகா ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியானாலும், தற்போது வரை  அதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'தி டர்ட்டி பிக்ச்சர்' - பார்ட் 2 படத்தில் நாயகியாகும் பிரபல தமிழ் பட நடிகை?
 

அதே போல் வாசுவின் கர்ப்பிணிகள் என்கிற படத்தில், அனிகா ஒரு கர்ப்பிணியாக நடித்துள்ளார். இதுகுறித்த போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து வித்தியாசமான கதையில், நடிக்க விரும்பும் அனிகா... தன்னுடைய கதாபாத்திரம் அழுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதால் இது போன்ற சர்ச்சை கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!
 

நடிப்பின் மீது எந்த அளவு கவனம் செலுத்தி வருகிறாரோ... அதே அளவிற்கு, மாடலிங் துறையிலும் அனிகா கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல்... தண்ணீருக்கு நடுவே, பூ... பழங்களோடு போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

click me!