பிரபல இயக்குநர் பாரதிராஜாவிற்கு ..திடீர் உடல்நலக்குறைவு..என்ன நடந்தது தெரியுமா?

First Published | Aug 21, 2022, 2:13 PM IST

பாரதிராஜா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இப்போது பாரதிராஜா நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் சுட்டிக் காட்டக்கூடிய பிரபல இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. இவர் இயக்கத்தில் வெளியான மண் வாசனை கலந்த படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் பிளாக்பாஸ்டர் அடித்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு...இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!

Famous director Bharathiraja have sudden ill health.

மேலும் 90களில் ஹிட் நாயகியாக இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாரதிராஜாவின் மூலம் அறிமுகமானவர்கள் தான். மேலும் பல முன்னணி இயக்குனர்கள் கூட இவரிடம் பாடம் கற்றவர்களே. நல்ல சித்தரிப்பை கொடுக்க இவர் கடினமாக நடந்து கொண்டாலும் படம் வெளியாகி அந்த நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக்கொடுக்கும் என்னும் பெயரை தனக்கு சொந்தமாக்கியவர் பாரதிராஜா.

மேலும் செய்திகளுக்கு...காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்

இவர் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி மாஸ் காட்டி வரும் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்துள்ளார் பாரதிராஜா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tap to resize

Famous director Bharathiraja have sudden ill health.

முன்னதாக ராக்கி என்னும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் இயக்குனர். இவற்றுடன் சேர்த்து வெற்றிமாறனின் விடுதலைப் படத்திலும் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. பின்னர் விலகிவிட்டார் என கூறப்படுகிறது. இந்நிலைகள் இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!

அதாவது நேற்று மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இப்போது பாரதிராஜா நலமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

click me!