இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!

Published : Aug 21, 2022, 12:16 PM IST

தென்னிந்திய சினிமாவில், மிக பிரபலமான இந்திய நடிகர்கள் யார் யார்? என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
110
இந்திய அளவில் மிக பிரபலமான நடிகர்கள்! முதல் இடத்தை பிடித்த தளபதி! அஜித்தை முந்திய சூர்யா... டாப் 10 லிஸ்ட்!

இந்திய அளவில் மிக பிரபலமான சினிமா நடிகர்கள் குறித்த பட்டியலை, ஆர் மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா என்ற நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த நடிகர்கள் பெயர் வெளியாகியுள்ளது.
 

210

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில், கடைசியாக வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு  பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்
 

310

இரண்டாவது இடத்தில், 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் உள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'ராதே ஷியாம்' திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து தற்போது ஆதிபுருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
 

410

மூன்றாவது இடத்தில் உள்ளவர், 'RRR' பட நாயகன் ஜூனியர் NTR. வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் அது ஹிட்படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் இவர், அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்பதே... ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்: சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!
 

510

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை  பிடித்துள்ளவர் 'புஷ்பா' பட நாயகன் அல்லுஅர்ஜூன். புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக போகவில்லை என்றாலும், இரண்டாவது பாகத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுக்கும் முயற்சியில் தற்போது படக்குழு இறங்கியுள்ளது.
 

610

ஐந்தாவது இடத்தில் உள்ளவர் கே.ஜி.எப் பட நடிகர் யாஷ். இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே தென்னிந்திய சினிமாவில், சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், வெற்றியை தக்க வைத்து கொள்ள மீண்டும் பிரமாண்ட படைப்பாக உருவாகும் கதைக்கு காத்திருக்கிறார் நடிகர் யாஷ்.

மேலும் செய்திகள்: ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!
 

710

ஆறாவது இடத்தில் நடிகர் ராம் சரண் உள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'RRR' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்தை... பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

810

ஏழாவது இடத்தில் இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். பாலிவுட் முன்னணி நடிகர்களிலேயே அதிக படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பொதுவாகவே டாப் 10 லிஸ்டில் 5 இடங்களுக்குள் வருவது வழக்கம். ஆனால் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சாம்ராட் ப்ரிதிவிராஜ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்ததால், 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது இவரது கைவசம், சூரரை போற்று ரீமேக் உட்பட 5திற்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது.
 

மேலும் செய்திகள்: சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு 'தி டர்ட்டி பிக்ச்சர்' - பார்ட் 2 படத்தில் நாயகியாகும் பிரபல தமிழ் பட நடிகை?
 

910

இந்த லிஸ்டில் எட்டாவது இடத்தில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளார். கடைசியாக இவர் தயாரித்து நடித்திருந்த, சர்க்காரு வாரி பட்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிக்க உள்ள சில படங்கள் குறித்து அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தாலும், அதிகார பூர்வமாக இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

1010

ஒன்பதாவது இடத்தில் இருப்பவர், ரோலக்ஸ் சூர்யா தான். இந்த லிஸ்ட்டில் கடைசியாக 10 ஆவது இடத்தில் அஜித் உள்ளார். தொடர் வெற்றி படங்கள் மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து, வலிமை நாயகன் அஜித்தையே முந்தி விட்டார் சூர்யா. இதனை சூர்யா ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்: மீண்டும் எப்போது? நயனுடன் கண்களால் காதல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ஏக்கத்தை வெளிப்படுத்திய விக்கி!
 

Read more Photos on
click me!

Recommended Stories