mohanlal mammootty
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மிளிர்ந்து வருபவர் மோகன்லால். இரண்டு தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் அன்பை பெற்று வரும் இவர் பாக்ஸ் ஆபிஸ் மன்னராக ஜொலித்து வருகிறார். இந்நிலையில் மோகன்லால் கொச்சியில் உள்ள குந்தனூரில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 15 வது மற்றும் 16ஆவது அடுக்குமாடுகளை ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
mohanlal mammootty
மோகன்லால் மற்றும் மம்முட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதோடு மம்மூட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பதிவு செய்து லாலோட புதிய குடும்பத்துடன் வீட்டில் என எழுதியுள்ளார்.
70 வயதுகளை கடந்து விட்ட மம்முட்டியும் சரி 62 வயதான மோகன்லாலும் சரி இருவரும் சளைக்காத போட்டியாளர்கள் என்று கூறலாம். ஆனால் உண்மையில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத நண்பர்களாக உலா வருகின்றனர்.
mohanlal mammootty
தேசிய விருது முதல் பாக்ஸ் ஆபிஸ் வரை இவர்களது போட்டி தொடர்ந்தாலும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அதோடு இவர்கள் இருவரின் மகன்களும் தற்போது முன்னணி நடிகர்களாக மாறிவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு...காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்
மோகன்லால் எம்புரான், ராம், த்ரிஷ்யம் 3, பரோஸ் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதேபோல மம்முட்டியும் நண்பகல் நேரத்து மயக்கம்,ரோர்ஷ்சா, கிறிஸ்டோபர், கடுகன்னவா ஒரு யாத்ரா மற்றும் பிலால் என ஐந்து படங்களில் நடித்த வருகிறார்.