‘வல்லமை’லாம் இல்லைங்க... அஜித் படத்துக்காக ஜெய்சங்கரின் கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்கிய எச்.வினோத்

First Published | Sep 20, 2022, 7:33 AM IST

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்துக்கு வல்லமை என பெயரிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறு ஒரு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை இயக்கிய எச்.வினோத், தற்போது நடிகர் அஜித் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ஏகே 61 என அழைத்து வருகின்றனர். மேற்கண்ட இரண்டு படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியரும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதர காட்சிகளை புனேவில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த பேங்காக் சென்றுள்ளது.

இதையும் படியுங்கள்... சேரனிடம் பற்ற வைத்த சினேகா... 'ஆட்டோகிராப்' பட வாய்ப்பை இழந்த பிரபலம்! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Tap to resize

அங்கு அஜித் நடிக்கும் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பேங்காக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தங்கி ஷூட்டிங்கை நடத்த உள்ளனர். இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தொடங்க உள்ள படக்குழு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங்கே முடிய உள்ள நிலையிலும், ஏகே 61 படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இடையிடையே இப்படம் குறித்து ஏதாவது சில தகவல்கள் லீக்காகும், அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்திற்கு வல்லமை என பெயரிட உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வேறு ஒரு டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. 

சமீபத்திய தகவல்படி ஏகே61 படத்துக்கு “துணிவே துணை” என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாம். இதே தலைப்பில் ஜெய்சங்கர் நடித்த கிளாசிக் ஹிட் படம் ஒன்றும் உள்ளது. முன்னதாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கு இந்த தலைப்பு வைக்க பரிசீலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உறுதியான காதல் கிசுகிசு? நிச்சயதார்த்த விழாவில் ஜோடியாக கலந்து கொண்ட கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்..!

Latest Videos

click me!