தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக இருக்கும் அஜித், தற்போது 'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், மூன்றாவது முறையாக அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ள நிலையில்.. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திரைக்கு வருகிறது.