Aishwarya Rajinikanth Friendship : நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அரசியல் வாரிசுடன் நெருக்கமானது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின்னர் நடிகர் தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து வை ராஜா வை மற்றும் லால் சலாம் ஆகிய படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா. மூன்று படங்களை இயக்கினாலும் இதுவரை அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
26
Rajinikanth Daughter Aishwarya
ஐஸ்வர்யா ரஜினிகாந்த நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இருமகன்கள் உள்ள நிலையில், சுமார் 18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு 2 ஆண்டுகளாக கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், நாளை அதற்கான தீர்ப்பும் அறிவிக்கப்பட உள்ளது.
36
Aishwarya Rajinikanth, Kanimozhi
இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அரசியல் வாரிசுடன் தனக்கு 20 வருட நட்பு இருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறி இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த அரசியல் வாரிசு வேறுயாருமில்லை, கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி தான். கனிமொழியின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் யூடியூப் சேனல் ஒன்று நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கனிமொழி உடனான தனது நட்பு பற்றி முதன்முறையாக பேசி இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது : “பொதுவாக நான் எங்குமே செல்லமாட்டேன். ஆனால் கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்துவிடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு. எங்களுடையது விவரிக்க முடியாத ஒரு உறவு. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் முதலில் போன் பண்ணி பேசுவது அக்காவிடம் தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து நிறைய திட்டி இருக்கிறேன்.
56
Aishwarya Rajinikanth About Kanimozhi
இன்னும் நல்லா பேசனும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். எனக்கு நட்பு வட்டாரம் ரொம்ப கம்மி. அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வாட்டாரத்தில் ஒருவர் தான் கனிமொழி அக்கா. அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னுடைய கோவில் வழிகாட்டி அவங்க தான். நான் எந்த ஊருக்கு, எந்த கோவிலுக்கு போனாலும் அக்காவின் ஆளுங்க தான் என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க.
66
Aishwarya Rajinikanth Friendship
அக்கா என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை. ஆனால் அவங்களுக்கு கமர்ஷியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். பார்க்க தான் அவங்க சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவங்க சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும். எப்பவுமே சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுவதாக அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸா இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே என வாயடைத்துப் போய் உள்ளனர்.