KGF-ஐ விட டபுள் மடங்கு பட்ஜெட்டில் தயாராகும் சிவகார்த்திகேயனின் SK 25!

First Published | Nov 26, 2024, 9:42 AM IST

SK 25 Movie Budget : சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள எஸ்.கே.25 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan SK 25 Movie

அமரன் படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவர் நடித்த அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி என்கிற இமாலய வசூலை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்.கே.23 படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Sudha Kongara, Sivakarthikeyan

இதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். அதில் ஒரு படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் மற்றொரு படத்தை சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவும் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்திற்கு தற்காலிகமாக எஸ்.கே.25 என பெயரிடப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யா திருமண ஒளிபரப்பு உரிமை; இத்தனை கோடிக்கு வாங்கியதா Netflix?

Tap to resize

Jayam Ravi, Sivakarthikeyan

அதுமட்டுமின்றி இப்படத்தில் முதலில் சூர்யா தான் நாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யா விலகியதால் அவருக்கு பதில் சிவகார்த்திகேயனை கமிட் செய்துள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். தற்போது தெலுங்கு திரையுலகில் பிசியான நாயகியாக வலம் வரும் ஸ்ரீலீலா இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

Sudha Kongara Direct SK 25 Movie

மேலும் எஸ்.கே.25 திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இதுதவிர நடிகர் அதர்வாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக எஸ்.கே.25 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம்.

Sivakarthikeyan SK 25 Movie Budget

அமரன் படம் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான படமாகும், அப்படத்தை ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்து இருந்தனர். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியால் எஸ்.கே.25 படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இது நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாஸ் வெற்றியை பெற்ற கேஜிஎப் 1 திரைப்படத்தின் பட்ஜெட்டை விட டபுள் மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உச்சம் தொடும் சிவகார்த்திகேயன்; 24 நாளில் அமரன் தமிழகத்தில் செய்த மெகா சாதனை!

Latest Videos

click me!