விடாமுயற்சிக்கே விடிவுகாலம் வரல; அதற்குள் அடுத்த படத்தில் கமிட்டான மகிழ் திருமேனி!

First Published | Nov 26, 2024, 7:38 AM IST

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி, அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் அப்டேட் கசிந்துள்ளது.

Magizh Thirumeni

அருண் விஜய் நடித்த தடையற தாக்க, தடம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி. இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசெண்ட்ரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார்.

Magizh Thirumeni, Ajith

விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது. இப்படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி பின்வாங்கி உள்ளது. அதற்கு பதிலாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2024-ல் ஓவர் பில்டப்போடு வெளியாகி அட்டர் பிளாப் ஆன தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

Tap to resize

Vidaa Muyarchi

விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருவதாக கூறப்பட்டாலும் அப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்துக்கே இன்னும் விடிவுகாலம் பிறக்காத நிலையில், அதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகிவிட்டாராம் மகிழ். அதன்படி அவர் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நடிகர் சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

vikram

நடிகர் விக்ரம் நடிப்பில் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சு.அருண்குமார் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைகாண உள்ளது. வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆன பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனதும் தொடங்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... தர லோக்கல் பாய்ஸ் ஆக மாறி; குத்தாட்டம் போட்ட தனுஷ் - சிவகார்த்திகேயன்!

Latest Videos

click me!