Published : Nov 26, 2024, 08:41 AM ISTUpdated : Nov 26, 2024, 08:42 AM IST
Naga Chaitanya - Sobhita Dhulipala Wedding : நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா ஜோடியின் திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா, அவரின் மூத்த மகனான நாக சைதன்யாவும் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்துகொண்டார். காதலித்து கரம்பிடித்த இந்த ஜோடி, அடுத்த நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சமந்தா உடனான திருமண முறிவுக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார் நடிகர் நாக சைதன்யா.
25
Naga Chaitanya Lover Sobhita Dhulipala
கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தாலும் அவ்வப்போது அவர்கள் இருவரும் ஜோடியாக வெளிநாட்டுக்கு சென்று டேட்டிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிடும். இருந்தாலும் இதுபற்றி வாய்திறக்காமல் சைலண்டாக இருந்த இந்த ஜோடி, கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் செய்துகொண்டனர். அப்போது தான் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நாகார்ஜுனா.
நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக நடத்தி முடித்தாலும் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் நாகார்ஜுனார். வருகிற டிசம்பர் 4-ந் தேதி நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமணம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே களைகட்டி உள்ளன. இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
45
Naga Chaitanya, Sobhita Dhulipala Wedding
சமீப காலமாக திருமணம் என்பது பிசினஸ் ஆகிவிட்டது. குறிப்பாக நடிகர், நடிகைகளின் திருமணம் என்றால் அதை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, அதை பிசினஸ் ஆக்கி கோடி கோடியாய் சம்பாதித்து வருகின்றனர். அண்மையில் கூட நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் ஆவணப்படமாக வெளியானது. இதற்காக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
55
Naga Chaitanya, Sobhita Dhulipala Wedding Streaming rights
இந்த நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடியின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாம். இதனால் நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமணத்திலும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.