
எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒருவரு திரைத்துறையில் நுழைவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் 1000 முறைக்கு மேல் நிராகரிக்கப்பட்ட நடிகை ஒருவர் இன்று தென்னிந்தியா சினிமாவை கடந்து பாலிவுட்டில் தடம் பதித்து வருகிறார். இந்த நடிகைக்கு சமீபத்தில் விவாகரத்தான நடிகருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. யார் அந்த நடிகை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல நடிகை சோபிதா துலிபாலா தான்.. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சோபிதாவின் தந்தை ஒரு வணிக கடற்படை பொறியாளர் ஆவார். அவரின் அம்மா பள்ளி ஆசிரியை. விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சோபிதா, பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்தார்.
மும்பையில் கார்ப்பரேட் சட்டப்படிப்பை முடித்தார். குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞராகவும் சோபிதா இருக்கிறார். 2010 ஆண்டு Navy Ball pin போட்டியில் பங்கேற்ற சோபிதா கடற்படை ராணி என்ற பட்டம் பெற்றார்.
சோபிதாவுக்கு மாடலிங் மீது ஆர்வம் வரத்தொடங்கிய நிலையில், தனது தோழி மூலம் மாடலிங் துறையில் நுழைந்தார். பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் எர்த் 2013 போட்டியில் பங்கேற்ற அவர் அதில் வெற்றி பெறவில்லை மிஸ் ஃபோட்டோஜெனிக், மிஸ் பியூட்டி ஃபார் எ காஸ், மிஸ் டேலண்ட் மற்றும் மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ் ஆகிய பட்டங்களை வென்றார்.
சினிமாவுக்கும் சோபிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், ஆடிஷன் மூலம் திரையுலகில் நுழைவது மட்டுமே அவருக்கு இருந்த ஒரே வழி.. தொடர்ந்து 3 வருடங்கள் ஆடிஷன் மட்டுமே செய்து வந்த சோபிதா , தனது வாழ்க்கையில் 1,000 ஆடிஷன் செய்ததாகவும், அத்தனை முறை நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தனது டஸ்கி நிறம் காரணமாக பல முறை தான் நிராகரிக்கப்பட்டதாகவும் சோபிதா கூறியிருந்தார். தான் விளம்பரங்களில் நடிப்பதற்கு அவர் கலராக இல்லை என்று பலமுறை கூறப்பட்டதாகவும், இன்னும் சிலரோ தான் அழகாக் இல்லை என்று நேரடியாகவே தன் முகத்தின் முன்பு நேரடியாக கூறியதாகவும் சோபிதா கூறியிருந்தார்.
சோபிதா துலிபாலா அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் சோபிதாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. பல வெற்றி படங்களில் நடித்ததால் பிசியான நடிகையாக மாறினார். இதனிடையே வெப் சீரிஸில் நடிக்க தொடங்கிய அவருக்கு 'மேட் இன் ஹெவன்' என்ற வெப் சீரிஸ் திருப்புமுனையாக அமைந்தது.
.'தி நைட் மேனேஜர்' என்ற வெப் சீரிஸ் மூலம் ஷோபிதா பான் இந்தியா அளவில் பிரபலமானார். இந்த வெப் சீரிஸில் பிரபல பாலிவுட் சூப்பர்ஸ்டார் அனில் கபூருக்கு ஜோடியாக நடித்தார். ஆரம்பகால போராட்டங்கள் இருந்தபோதிலும், இப்போது திரையுல் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சோபிதா முயன்று வருகிறார். தேவ் படேல் இயக்கத்தில் வெளியான 'மன்கி மேன்' படத்தில் நடித்ததன் மூலம் சோபிதா ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
அன்று 1000 நிராகரிப்புகளை சந்தித்த சோபிதா துலிபாலா தற்போது பாலிவுட்டில் ஒரு தைரியமான நடிகையாக கருதப்படுகிறார். திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு பெயரை பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அனில் கபூர், நவாசுதீன் சித்திக் மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் OTT நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 'மேட் இன் ஹெவன்', 'பொன்னியின் செல்வன் 1', 'பொன்னியின் செல்வன்: II' மற்றும் 'தி நைட் மேனேஜர்' ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரபல நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா உடன் சோபிதா துலிபாலா டேட்டிங் செய்வதாக தொடர்ந்து தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் இந்த ஜோடியின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சோபிதா - நாக சைதன்யாவின் திருமணம் வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சோபிதாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த போட்டோவில் சோபிதா செம க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.