வரலட்சுமி விரதம் இந்து மத நம்பிக்கைகளின் படி, ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி திதிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் இந்த விரதத்தை தங்களின் மாங்கல்ய பலம் கூட வேண்டும் என்பதற்காக மிகுந்த பக்தியுடன் கடைபிடிக்கிறார்கள். அந்த வகையில் பிரபலங்கள் பலர் வரலட்சுமி பூஜை அன்று அவர்கள் வீட்டில் பூஜை செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதுகுறித்த சில புகைப்படங்களையும், அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவர். மேலும், சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சினிமாவில் ஒரு ஹீரோயினாக ஜொலிக்கமுடியாத நிலையில், சீரியல் - ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.