அஜித் குமார்
தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் இந்திய சினிமாவிலேயே மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர் என்பதில் சந்தேகம் இல்லை. கோலிவுட்டின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான அஜித், தனது நடிப்பாலும் தனி வாழ்க்கையாலும் பலரையும் தனது ரசிகர்களாக மாற்றியுள்ளார்.
'அமராவதி' அஜித்
1990ஆம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஜித், 1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார். அன்றிலிருந்து அஜீத் குமார் திரைத்துறையில் கோலோச்சி வருகிறார். 'காதல் கோட்டை', 'காதல் மன்னன்', 'காதல் தேசம்', 'வாலி', 'தீனா', 'வில்லன்', 'சிட்டிசன்', 'முகவரி', 'வீரம்', 'வேதாளம்', உட்பட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
ஒரு மாதத்தில் ரூ.2 கோடி
பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அவருக்கு சுமார் 25 மில்லியன் டாலர், அதாவது ரூ.196 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்; அஜித்குமார் ஒரு மாதத்தில் ரூ.2 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் நடிப்பதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.24 கோடி என்று சொல்கிறார்கள்.
பிராண்ட் அம்பாசிடர்
அஜீத் நடிப்புக்குப் பெறும் சம்பளம் தவிர, தனது படங்களின் லாபத்திலும் ஒரு பங்கை பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. நெஸ்கஃபே, ஏசியன் பெயிண்ட்ஸ், ராயல் ஸ்டாக் போன்ற பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் இருப்பவர் அஜித்.
தொழில்கள் மற்றும் முதலீடுகள்
அஜீத் ஒரு படத்திற்கு சுமார் ரூ.24 கோடியில் இருந்து ரூ.26 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மேலும் அவர் பெயரில் பல தொழில்கள் மற்றும் முதலீடுகள் உள்ளன. சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் இணை உரிமையாளராக இருக்கிறார். பல திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அஜித் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் இருக்கிறது. இப்படி அஜித்தின் தனிப்பட்ட முதலீடுகள் சுமார் ரூ.42 கோடி இருக்குமாம்.
ஜெட் விமானம்
தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார் அஜித். அந்த ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.25 கோடி என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
ஆடம்பரமான பங்களா
சென்னையில் ஒரு ஆடம்பரமான பங்களாவில் வசிக்கும் அஜித், பைக் ரேசில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். MRF ரேசிங் சீரிஸ் (2010) மற்றும் JK ரேசிங் ஆசியா சீரிஸ் (2011) ஆகியவற்றில் கலந்துகொண்டிருக்கிறார். ரூ.36 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பைக், கார்களை வைத்திருக்கிறார்.
லம்போர்கினி
ரூ.34 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார், BMW 7-சீரிஸ் 740 Li, Aprilia Caponard பைக், BMW S1000 RR பைக் மற்றும் BMW K1300 S பைக் ஆகிய அஜித் வசம் உள்ளன. பைக்குகளின் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருக்கும்.