2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!

Published : Aug 25, 2023, 05:19 PM ISTUpdated : Aug 25, 2023, 05:21 PM IST

நடிகை மீனா, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய உலக கோப்பை போட்டியின், 'உலக கோப்பையை' அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  

PREV
14
2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!

2013 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.  இந்தியா உட்பட சுமார் 10 நாடுகளை சேர்ந்த அணிகள், உலக கோப்பை விளையாட்டில் கலந்து கொள்ள உள்ளது. மேலும் இந்த முறை கிரிக்கெட் உலக கோப்பை விளையாட்டு இந்திய மண்ணில் நடைபெற உள்ளதால், இந்திய நடிகையான மீனா... 2023 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

24

இந்த உலக கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை  அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன். என்று மிகவும் பெருமையாக  தெரிவித்துள்ளார். 

அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!

34

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். தற்போது 2023 ஆம் ஆண்டின் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின், பிரம்மாண்டமான கோப்பையுடன் நடிகை மீனா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

44

ரசிகர்கள் பலரும் மீனாவுக்கு தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உலக கோப்பை அறிமுகம் நிகழ்ச்சி வெளிநாட்டில் நடந்திருந்தாலும், மீனா தமிழருக்கே உரிய ஆடையான சேலையில் தான் இந்த கோப்பையை அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?
 

click me!

Recommended Stories