'கோலமாவு கோகிலா', 'டாக்டர்', போன்ற தரமான திரைப்படங்களை அடுத்தடுத்து இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
நெல்சன் கடைசியாக தளபதி விஜய்யை வைத்து இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், சில விமர்சனங்களுக்கு ஆளானார். அதே போல் சில நிகழ்ச்சிகளில் நெல்சன் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சைகளும் எழுந்தது. எனவே எப்படியும் 'ஜெயிலர்' படத்தின் மூலம் தன்னுடைய வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயத்தில் நெல்சன் திலீப் குமாருக்கு இருந்தது. அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த, போன்ற படங்களும் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் அவருக்கு தரமான கம் பேக்காக அமையுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது.
ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?
இந்நிலையில் இப்படம் வெளியான ஒரே வாரத்தில் சுமார் 375 கோடி வசூலித்து உலக அளவில் மாஸ் காட்டியது. இந்த தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனமும் உறுதி செய்தது. இதை தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆகும் நிலையில், ஜெயிலர் திரைப்படம் இரண்டு வாரத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது, என்கிற தகவலை சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த படம் இரண்டு வாரத்தில் உலகம் முழுவதும் சுமார் 525 கோடி வசூலித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை 'ஜெயிலர்' திரைப்படம் இரண்டே வாரத்தில் முறியடித்துள்ளது. அதே போல் இதுவரை பாக்ஸ் ஆபிசில் அதிகம் கல்லா கட்டிய படமாக 2.0 இருக்கும் நிலையில், இந்த படத்தின் வசூலான 600 கோடியை ஜெயிலர் பீட் பண்ணுமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
உள்ளாடை போடலையா? ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கவர்ச்சி அதகளம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! கிக் ஏற்றும் போட்டோஸ்!
ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் வசந்த் ரவி மிர்னா, யோகி பாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், மலையாள நடிகர் விநாயகன் மாஸ் வில்லனாக மிரட்டி இருந்தார். அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் ஆகியோர் காமியோ ரோலில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.