
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவிய பல நடிகைகள், ஓரிரு படங்களிலேயே சொந்த ஊருக்கு நடையை கட்டி விடுகின்றனர். இல்லை என்றால் மீண்டும் சீரியல் பக்கமே கரை ஒதுங்குகின்றனர். ஆனால் தரமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை வாணி போஜன் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
36 வயதை எட்டி உள்ள நடிகை வாணி போஜன், தமிழகத்தில் உள்ள ஊட்டி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர். தன்னுடைய சொந்த ஊரில் உள்ள கவர்மெண்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி ஏ இங்கிலீஷ் பாடத்தை தேர்வு செய்து படித்து பட்டம் பெற்றார் வாணி போஜன். தன்னுடைய தந்தை ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் என்பதால், சிறு வயதில் இருந்தே புகைப்படங்கள் மற்றும் நடிப்பின் மீது வாணி போஜனுக்கு ஒரு ஆர்வம் இருந்து வந்தது.
சோபிதா இடத்தில் வைக்கப்பட்ட நாய்; அக்கினேனி மருமகளுக்கு நேர்ந்த அவமானம்!
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஏர் ஹோஸ்டர்ஸ் ட்ரைனிங் முடித்த வாணி போஜன், கிங் பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் இண்டிகோ நிறுவனத்தில் பணியாற்றினார். கிங் ஃபிஷர் நிறுவனத்தில் இவர் வேலைக்கு சேர்ந்த போது, ரூ.2500 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது.
இவருக்கு எதேர்ச்சியாக 'தி சென்னை சில்க்ஸ்' விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டு, தெரிந்தவர்கள் மூலம் திரைப்பட வாய்ப்பை தேட துவங்கினார். அந்த சமயத்தில் தான், 'ஊர் இரவு' என்கிற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
விவாகரத்து வதந்தி; ஒரே நாளில் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்!
ஆனால் இந்த படம் படு தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து அதிகாரம் 79 என்கிற திரைப்படத்தில் நடித்தார். இதுவும் கைகொடுத்தாததால், சீரியல் வாய்ப்புகளை தேட துவங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா, ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா, போன்ற சீரியல்களில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த வாணி போஜனுக்கு... சன் டிவியில் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'தெய்வமகள்' சீரியலில் சத்யப்பிரியா என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் வாணி போஜனை பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைய செய்தது மட்டும் இன்றி திரைப்பட திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாகவும் அமைந்தது. தமிழில் ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் பெரிதாகப் வெற்றிபெறவில்லை என்றாலும், அசோக் செல்வன் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான 'ஓ மாய் கடவுளே' திரைப்படம் வெள்ளித்திரையில் வாணி போஜனுக்கு வரவேற்பை பெற்று தந்தது.
பாகுபலி முதல் KGF வரை எல்லாமே அவுட்! இரண்டே நாளில் வெறித்தன வசூல் வேட்டையாடிய 'புஷ்பா 2'!
இதைத்தொடர்ந்து லாக் கப், மலேசியா டு அமினிஷியா, மிரள், பாயும் புலி நீ எனக்கு, லவ், அஞ்சாமை, போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது இவருடைய கைவசம் பகைவருக்கு அருள்வாய், கேசினோ, ஆகிய சில படங்கள் உள்ளன.
ஒரு ஏர் ஹோஸ்டராக ரூ.2500 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய வாணி போஜன், இன்று தமிழ் சினிமாவில் 50 லட்சம் வரை வாங்க கூடிய ஹீரோவாக மாறி உள்ளார். மேலும் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஷாருக்கானையே மிஞ்சிய அல்லு அர்ஜுன்! பாலிவுட் பாக்ஸ் ஆபிசை பதம்பார்த்த புஷ்பா 2!
வாணி போஜன் நடிப்பு மட்டுமின்றி யோகா ஆசிரியருக்கான பயிற்சியையும் பெற்றுள்ளார். ஊட்டியில் சொந்தமாக இவருக்கு வீடுகள் உள்ள நிலையில், சென்னையிலும் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதேபோல் 2 சொகுசு கார்களை வைத்துள்ளார். பிரபல நடிகர் ஜெய்யுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய வாணி பின்னர் அந்த தகவலை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.