ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த 5 மாதங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்க்கு ஒரே நாளில் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஒன்றாகக் இணைந்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
26
Aishwarya Rai and Abhishek Bachchan Photos
இந்தப் புகைப்படங்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற குடும்ப நண்பரின் திருமண வரவேற்பில் எடுக்கப்பட்டது. இதில் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது.
ஒரு புகைப்படத்தில், அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி, ஐஸ்வர்யாவின் அம்மா வ்ரிந்தா ராயுடன் மகிழ்ச்சியாக போஸ் கொடுப்பதை பார்க்க முடிகிறது.
66
Broke up the Divorce Rumor
இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தனித்தனியாக வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, இவர்களின் விவாகரத்து குறித்து பல செய்திகள் பரவியது. ஆனால் இதனை அபிஷேக் பச்சன் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், ஒரே நாளில் தங்களுடைய விவாகரத்து சர்ச்சைக்கு இந்த திருமண நிகழ்ச்சி மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த பாலிவுட் நட்சத்திர ஜோடி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.