சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா, அவ்வப்போது ரசிகர்கள் மனதை கவரும் விதமாக... வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வரும் நிலையில், தற்போது வித்தியாசமான உடையில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் தமன்னாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மட்டுமின்றி, அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தது. இதன் பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு விட்ட நடிகை தமன்னா, சமீப காலமாக தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல், பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் மூலம் தூண்டில் போட்டு வருகிறார்.
தற்போது தமிழை தவிர,ஹிந்தி , தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தலா ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வரும் தமன்னா... தமிழில் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் என்று சில தகவல்கள் வெளியான போதிலும் தற்போது வரை, இது குறித்து எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.