இந்நிலையில், கடந்த ஆண்டு திடீர் என கணவரிடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக சமந்தா அறிவித்தது திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர்களின் திருமண விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதிலும், இருவரும் ஒருமுறை கூட... விவாகரத்துக்கான காரணம் குறித்து உடைத்து பேசியது இல்லை. நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின்னர், சில மாதங்கள் மனஉளைச்சலில் இருந்த சமந்தா, ஒருவழியாக பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் உதவியால் அதில் இருந்து மீண்டு, மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.