தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடித்த 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். மஞ்சுளா மற்றும் விஜயகுமார் ஆகியோரின் நட்சத்திர தம்பதிகளின் மூத்த மகளான இவர், நடிகையாக அறிமுகமான சில வருடங்களிலேயே ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள வனிதா, திரையுலக வாழ்க்கையில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத போட்டியாளராக பார்க்கப்பட்ட இவர், வெளியேறிய பின்னரும்... மீண்டும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, ரசிகர்களிடம் வாக்குகள் குறைவாக பெற்று வெளியேறினார். இதை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தை பெற்றார்.
இதில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தன்னுடைய கசின் சிஸ்டரை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர், நடிகை விமலா ராமன் இவர் தன்னுடைய அம்மாவின் குடும்ப வழி உறவினர் என்றும், இவர் தன்னுடைய கசின் சிஸ்டர் என தெரிவித்துள்ளார். அதாவது சர் சிடி முத்துசாமி ஐயரின், கொள்ளுப்பேத்தி விமலா ராமன் என குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயர்களால் முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் அவர் என்றும், இன்றும் அவரது சிலை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.