பிகினிலாம் வேண்டாம்... கவர்ச்சி காட்ட இதுவே போதும் - பீச்சில் பளீச் என தொடையழகை காட்டி கிக் ஏற்றும் சிவானி

First Published May 28, 2022, 11:52 AM IST

Shivani Hot : பிசியான நடிகையாக வலம் வரும் சிவானி, தற்போது பீச்சில் தொடை தெரிய கவர்ச்சி காட்டி போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் பப்ளி பேபியாக அறிமுகமானவர் சிவானி நாராயணன். ஸ்கூல் படிக்கும்போதே அந்த தொடரில் நடிக்கத் தொடங்கிய சிவானி, பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி, அந்த தொடரிலேயே ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். 

இதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்த சிவானி, புகழ் வெளிச்சம் பெறுவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் இளசுகள் மத்தியில் பாப்புலர் ஆன சிவானி, அவர்களை ஈர்க்கும் விதமாக தினந்தோறும் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதன்மூலம் அவருக்கான ரசிகர் கூட்டமும் பெரிதானதோடு அவருக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கமல் நடிப்பில் வருகிற ஜூன் 3-ந் தேதி வெளியாக உள்ள விக்ரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் சிவானி. லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்துள்ள அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி நடித்துள்ளாராம். 

இதுதவிர ஜீவி பட நடிகர் வெற்றிக்கு ஜோடியாக பம்பர் படத்தில் நடிப்பதன் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் சிவானி. மேலும் ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார் சிவானி.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் சிவானி, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இயங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது பீச்சில் கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் தொடை தெரிய போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

click me!