மத்தியப்பிரதேச மாநிலத்தில் தலித் தம்பதியரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது
மத்தியப் பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் வயதான தலித் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதியின் மகன் பெண் ஒருவருக்கு தொந்திரவு அளித்ததாக கூறப்படுகிறது.
முங்காலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிலோரா கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியின் மகன் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மனைவிக்கு தொந்திரவு அளித்ததாக கூறப்படுகிறது.
undefined
இதையடுத்து, சமீபத்தில் அந்த கிராமத்தில் குடியேறிய அக்குடும்பம் அக்கிராமத்தை விட்டு வெளியேறியதாக முங்காலி காவல் நிலையப் பொறுப்பாளர் கப்பர் சிங் குர்ஜார் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை 65, 60 வயதுடைய தலித் தம்பதியை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, காலணி மாலைகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணிவித்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தீப்பிடித்த இன்ஜின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, 10 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.