எந்த உடை அணிந்தாலும் அதில், அழகு தேவதை போல் மின்னும் பிரியா ஆனந்த், தற்போது மஞ்சள் நிற பட்டு புடவையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பிரபல தமிழ் பட நடிகை பிரியா ஆனந்தின் பேஷன் சென்ஸ் எப்போதுமே டாப் தான். மாடர்ன் உடையாக இருகாலும், புடவையாக இருந்தாலும் நேர்த்தியாக தனக்கு பொருந்த கூடிய உடைகளை மட்டுமே தேர்வு செய்து போடுவது இவரது மிகப்பெரிய பிளஸ் எனலாம்.
27
அந்த வகையில் சமீபத்தில், பிரியா பாரம்பரிய உடையான பட்டு சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள்... வேறு லெவலுக்கு அவரது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியுள்ளதாவது “பல வருடங்களுக்கு முன்பு இன்று நான் வாமனன் மூலம் அறிமுகமானேன்! என்னுடன் இந்தப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த இதயத்துடன் நான் நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
67
மேலும் இயக்குனர் அகமது இப்ராஹிம், அரவிந்த் கிருஷ்ணா மற்றும் இஷ்யுவன் ஆகியோருக்கு தனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு பிரியா ஆனந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது, அதே போல் ரசிகர்கள் பலர் ப்ரியா ஆனந்தின் அடுத்த படத்திற்காக காத்திருப்பதாகவும், அவர் மிகவும் அழகானவர் என்றும் கூறி லீக்குகளையும், காமெண்ட்ஸையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.