சமீபத்தில் வெளியாகி பிளாக் போஸ்டர் அடித்த படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக லோகேஷ் இயக்கிய கார்த்தியின் கைது, விஜயின் மாஸ்டர் என இரு படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது விக்ரம் தாறுமாறு வெற்றி அடைந்துள்ளது. கமலின் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியானதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு முன்பே எகிரி இருந்தது.
விஜய் சேதுபதி, பகத் பாஸில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என கலக்கியது இந்த படம். அதிரடி த்ரில்லராக உருவான இந்த படம் போதை பொருள் கடத்தும் கும்பலை ஒடுக்குவதற்கான கதைகளமாக அமைந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு..தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி
விதவிதமான துப்பாக்கிகளும், குண்டுகளின் சத்தங்களும், இரத்தக் கலரி என அடி தூள் கிளப்பிய இந்த படம் நம்ம ஊரில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நல்ல ஆதரவை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மலையாளம் என பழமொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட து.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டு இருந்தது.
vikram movie
கிட்டத்தட்ட ரூ.430 கோடி வசூலித்த இந்த படம் கமலின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. அதோடு வாழ்நாள் சிறந்த படம் என விக்ரமை உதயநிதி பாராட்டி இருந்தார். இந்நிலையில் கேரளாவின் கமலின் விக்ரம் படம் பெற்ற வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கேரளாவில் மட்டும் இந்த படம் ரூ.40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - உதயநிதி...நன்றி தெரிவித்த நாயகன் !
vikram movie
இதற்கு முன்பு வெளியான எந்த தமிழ் படமும் இந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திரைக்கண்ட ரஜினியின் 2.0 ரூ.21. 5 கோடிகையும், பிகில் 21.5 கோடியையும், மெர்சல் 20.6 கோடியையும், ஐ 19.8 கோடியையும், கபாலி ரூ.16 கோடியையும், தெறி16 கோடி, எந்திரன் 15 கோடி, சர்க்கார் 13.75 கோடி, மாஸ்டர் 13.1 கோடி, பீஸ்ட் ரூ.10.85 கோடி, துப்பாக்கி 10. 75 கோடி, கத்தி 10.5 கோடி, 24 10.மூன்று கோடி, பைரவா 10 கோடி என இந்த படங்கள் மட்டுமே கேரளாவில் அதிக வரவேற்பு பெற்ற படங்கள் இதில் விக்ரம் சுமார் 40.5 கோடிகளை வசூலித்து முதல் இடத்தில் உள்ளது.