கார்த்தியின் சகுனி படம் மூலம் பிரபலமானார் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் முன்னதாக சாப்ளின் இயக்கத்தில் வெளியான உதயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் மற்ற மொழிகளுக்கு திரும்பிய பிரீத்தா மீண்டும் சகுனி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் கார்த்திக்கு கிடைத்த வரவேற்பு அளவிற்கு நாயகிக்கு கிடைக்கவில்லை.
பலவருட இடை வெளிக்கு பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அனுராதா என்ற பெயரில் தந்தையாக வரும் சூரியாவுக்கு ஜோடியாகி இருந்தார். ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் நடித்துள்ள இவருக்கு 2021 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அருமை.. விக்கியை நேரில் பாராட்டிய சூப்பர் ஸ்டார் !
ஹங்காமா 2, பூஜ் இந்தியாவின் பெருமை ஆகிய இரு படங்களில் நடித்த இவர் தற்போது ரமண அவதாரம் எனும் கன்னட படத்தில் நடித்து வருகிறார். ஃபிலிம் ஃபேர், சைமா உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் நடிகை ப்ரணிதா.
Pranitha Subhash
இந்த நிலையில் அவர் பீமனா அமாவாசை அதாவது ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்றைய முன் தினம் தனது கணவருக்கு பாத பூஜை செய்தார் ப்ரணிதா. அந்த புகைப்படங்களை தனது வலைதள பக்கம் பகிர்ந்து இருந்தார். பல ஊர்களில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வழக்கத்தின் படி அவர் செய்த பூஜை குறித்து சில நெட்டிஷன்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...மனைவி இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் தொடரை விமர்சனம் செய்த உதயநிதி - என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
இன்னும் பழைய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது குறித்து வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் சிலர், இது போன்ற பூஜைகள் தேவையற்றது மனிதருக்கு பூஜை செய்வது தேவையில்லாத ஒரு விஷயம் என்றும் ப்ரணிதா போன்ற பிரபலங்கள் இது போன்ற செயலை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.