நடிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசம் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்கள் உள்ளன. இதில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி ரிலீசாக உள்ளது.