பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், மாடலிங் மீதும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இதனால் இவர் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கியது.