நடிகை மீனாவின் கணவர், கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் நுரையீரல் பிரச்சனைக்கு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தேவையில்லாமல் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனக்கஷ்டத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தார் மீனா.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீனா... கணவர் இறந்த பின்னர் சமூக வலைத்தளம் பக்கமே வராமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர், திரையுலகை சேர்ந்த தோழிகள் தன்னை வந்து சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
தற்போது நடிகை மீனாவை, அவரது நெருங்கிய தோழிகளான... கலா மாஸ்டர் மற்றும் ரம்பா ஆகியோர் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.