வாரிசு படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை-யை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் பிஸியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் குறித்தான மூன்று டைட்டில் லுக்குள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. இதன் மூலம் விஜய் வெளிநாட்டில் இருந்து தன் கிராமத்திற்கு திரும்பும் இளைஞனாக இருப்பார் என தெரிகிறது. பீஸ்ட் படத்தில் பிளாக் பெப்பர் ஸ்டைலில் தோன்றிய விஜய் இதில் 90கள் நாயகனாக வருவது குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...laal singh chaddha twitter review : லால் சிங் சாத்தா மூலம் வெற்றி கண்டாரா அமீர்கான்...ட்வீட்டர் ரிவ்யூ இதோ!
இதற்கிடையே அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் காட்சிகள் புகைப்படங்களும் வீடியோக்களும் படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதோடு சமீபத்தில் விஜய் சென்னை திரும்பிய புகைப்படம் மற்றும் விமான நிலைய புகைப்படம் வைரலானது.