இயக்குனர் ஷங்கர், தற்போது ராம் சரணை வைத்து இயக்கி வரும் RC15 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிசியாக இருந்தாலும், கையேடு கையாக பாதியில் நிறுத்தப்பட்டு... பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் துவங்க உள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பையும் முடித்து கொடுக்க வேண்டும் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் நடத்த 10 நாட்கள் அனுமதி கோரப்பட்டதாம். தற்போது அங்கு அரசு அலுவல்கள் நடைபெறுவதால் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளனர்.
மேலும் ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிக்கும் 'மாமன்னன்' படப்பிடிப்பு விதிமுறையின் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடத்தப்பட்டு வருகிறதாம். ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டும் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதன்பின், கடும் முயற்சிகளுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: விஜய் டிவி செட்டில் காதலை சொல்லி... கல்யாணத்தையும் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாகும் போட்டோஸ்!
இதனை கேள்வி பட்ட இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று கோவமாக கேள்வி எழுப்பியதாக அரசால் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து தற்போது வரை எவ்வித உறுதியான தகவலும் வெளியாகவில்லை.