5 ஆண்டுகளுக்கு மேலாக, காதலித்து வந்த நயன் - விக்கி ஜோடி, கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி, பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் தங்களை இணைத்து கொண்டனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இவர்களது திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து திரையுலகை சேர்ந்த டாப் பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்த கையேடு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்ற இந்த ஜோடி... பின்னர் ஹனி மூனுக்காக தாய்லாந்து சென்றனர். அங்கு சுமார் ஒரு வாரங்கள் தங்களுடைய ஹனி மூனை செலிபிரேட் செய்து விட்டு நாடு திரும்பிய ஜோடி, மீண்டும் தங்களுடைய வேலைகளில் பிஸியாகினர்.
அந்த வகையில் நயன்தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வந்த 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்னேஷ் சிவன், சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பியாட் போட்டிக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய நிலையில் அதனை சிறப்பாக செய்து முடித்தார். இதற்காக அவரை பலரும் மனதார பாராட்டினர்.
மேலும் செய்திகள்: படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் விஷால்!
தற்போது நயன்தாரா - விக்கி ஜோடி மீண்டும் தங்களுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக ஸ்பெயின் நாட்டுக்கு பறந்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாக... மீண்டும் இருவரும் ஹனி மூன் சென்றுள்ளார்களா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.