Published : Aug 11, 2022, 04:56 PM ISTUpdated : Aug 11, 2022, 04:57 PM IST
'ஏகே 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. படத்தின் முக்கிய படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நேர்கொண்ட பார்வை மற்றும் சமீபத்தில் வெளியான வலிமையை தொடர்ந்து அடுத்ததாக 61 வது படத்திற்கு மீண்டும் இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார் அஜித்குமார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக 'ஏகே 61' என்று பெயரிடப்பட்டுள்ளது.
வங்கி கொள்ளை சம்மந்தமான இந்த படத்தில் அஜித் இரு மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஹைதராபாத்தில் மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது.
இதையடுத்து சென்னையில் நடைபெற்ற சூட்டிங் பாதுகாப்பு கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் அடுத்தது ஷெட்யூல் ஹைதராபாத்தில் அல்லது புனேவில் நடைபெறும் என சொல்லப்பட்டது. இதற்கிடையே அஜித்தின் வெளிநாடு சுற்றுப்பயணம் மற்றும் இங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் நாயகன் கலந்து கொண்ட போட்டோஸும் வைரலானது.
இந்நிலையில் 'அஜித் 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. படத்தின் முக்கிய படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர் உடன் வீரா, ஜான் கொக்கன், அஜய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் முதன்முறையாக அஜித்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக அஜித் 61 இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என தெரிகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.