மலையாள திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், நடிகை லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படங்கள் அமைந்தது என்றால் அது தமிழில்தான். இவர் அறிமுகமான 'சுந்தர பாண்டியன்', மற்றும் 'கும்கி' ஆகிய படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த குட்டி புலி, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை ஆகிய படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றாலும், கடந்த சில வருடங்களாக இவருடைய திரையுலக வாழ்க்கை சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறது. தற்போது இவர் தமிழில் கடைசியாக 'யங் மங் சங்'என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் லட்சுமி மேனனும் மிகவும் சைலண்டாக இருக்கிறார். இப்போதைக்கு அவருடைய ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து மனதை தேற்றி கொள்ளுங்கள்...